புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நடந்தது.

Update: 2023-05-22 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து அன்னை ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் தாணிக் கோட்டகம் கடைத்தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. பின்னர் நாகை பங்கு தந்தை பன்னீர்செல்வம், ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் ஆகியோர் கொடியினை ஏற்றி வைத்தனர். பின்னர் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 27-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்