புள்ளம்பாடி, தொட்டியம், ஜீயபுரம், லால்குடி, தா.பேட்டை பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா
புள்ளம்பாடி, தொட்டியம், ஜீயபுரம், லால்குடி, தா.பேட்டை பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றது.
புள்ளம்பாடி, தொட்டியம், ஜீயபுரம், லால்குடி, தா.பேட்டை பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்றது.
நல்லகூத்தய்யனார்
புள்ளம்பாடி ஒன்றியம் வந்தலை கூடலூர் கிராமத்தில் நல்ல கூத்தய்யனார் சாமி, உசிலடி கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. நேற்று சாமிகள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் அய்யனார் சாமி சிலை தாங்கிய தேரோட்டம் நடக்கிறது. இதில் சுற்றுவட்டாரத்ைத சேர்ந்த ஏராளமானோர் கலந்து ெகாண்டனர்.
தொட்டியம்
தொட்டியம் அருகே உள்ள திருஈங்கோய்மலை கீழத்தெரு மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வீதி உலா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் தங்களது தலை மற்றும் தோளில் சுமந்து சென்றனர். மாலையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பால்குடம், சந்தன குடம், இளநீர் மற்றும் காவிரி புனித நீர் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜீயபுரம்-லால்குடி
ஜீயபுரம் அருகே கோப்பு மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற வருகிறது. நேற்று அம்மன் பசுபதி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
சித்திரை திருவோணத்தையொட்டி லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
தா.பேட்டை
தா.பேட்டைபகவதி மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல், கரகம் பாலித்தல் மற்றும் செவந்தாம்பட்டி மதுரை வீரன் சுவாமி கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் அக்னி சட்டி, தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க உலா வந்து அம்மன் நிலையில் ஊற்றி குளிர்வித்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு படைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முசிறி
முசிறி காமராஜர் காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று மதியம் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை பொங்கல் படைத்து, அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி பக்தர்கள் வீதி வலம் வந்தனர். முத்து மாரியம்மன் மலர் மற்றும் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,