திருவிழா கொடியேற்றம்

அம்பை வாகைப்பதியில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் நடந்தது

Update: 2022-09-02 21:06 GMT

அம்பை:

அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக அய்யா வைகுண்டர் ஸ்ரீமன் நாராயண சாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்று கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர் அனுமன், கருடன், நாகம், சூரியன், பூபல்லக்கு, அன்னம், இந்திரன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பார். பதினொரு நாட்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு முழு நேரம் நடைதிறப்பு மற்றும் தினமும் மதியம் உச்சிபடிப்பு, அன்னப்பால் கஞ்சி தர்மமும் இரவு 7 மணிக்குமேல் அன்னதர்மமும் நடைபெறுகிறது. எட்டாம் திருநாள் அன்று அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்தாம் திருநாளன்று முந்திரி கிணற்றில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தன குடம், பால்குடம் மற்றும் சிறப்பு பணிவிடை நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 12-ந் தேதி பதினோராம் திருநாளன்று மாலை 4 மணிக்கு சிறப்பு செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடைபெறும்.

11-ம் திருநாளன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யாபவனியாக வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்