வெள்ளைப்பாறை முனியப்பசாமி கோவிலில் திருவிழா

வெள்ளைப்பாறை முனியப்பசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது

Update: 2023-08-10 22:11 GMT

சோலாரை அடுத்த 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிக் காட்டுவலசு பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளைப்பாறை முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 8-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கரகம் எடுத்தல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் காலையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர் மாலையில் பெரும் பூஜை நடைபெற்றது. நேற்று காலை மறுபூஜையுடன் விழா நிறைவடைந்தது. இதையொட்டி நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் செய்திகள்