முத்துமாரியம்மன் கோவில் செடில் உற்சவம்
முத்துமாரியம்மன் கோவில் செடில் உற்சவம்
வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே கருங்கண்ணியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 16- ந்தேதி காப்புகட்டுதல் மற்றும் முத்துமாரியம்மன், பத்ரகாளியம்மன், கருமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவிற்கு கருங்கண்ணி, களத்தில்கரை, மேலப்பிடாகை, திருமனங்குடி முப்பத்திகோட்டகம், சோழவித்யாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் காவடி, ரதக்காவடி, அலகுக்காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி நிகழ்ச்சியும், செடில் உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.