விருதுநகர் காந்திபுரம் தெரு காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மன் அக்னி சட்டி ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.