நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே பூதனஅள்ளி ஊராட்சி பூதனஅள்ளி கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.