மங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1,330 டன் உரம் வந்தது

Update: 2022-10-06 18:45 GMT

தர்மபுரி:

மங்களூருவில் இருந்து 1,330 டன் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு வந்தது. இந்த உரங்களை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லம் மேற்பார்வையில் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 400 டன் யூரியா, 180 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 490 டன் யூரியாவும், 260 டன் காம்ப்ளக்ஸ் உரமும் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த பணியை வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட மொத்த விற்பனையாளர் பார்த்திபன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்