சரக்கு ரெயிலில் 1,335 டன் உரம் வந்தது

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1,335 டன் உரம் தர்மபுரிக்கு வந்தது

Update: 2022-09-19 18:45 GMT

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருவமழை நன்றாக பெய்து உள்ளதால் விவசாய சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான உர தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,335 டன் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் வந்தன. இந்த உரங்களை தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி வேளாண் இணை இயக்குனர் முகமது அஸ்லம் மேற்பார்வையில் நடைபெற்றது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளுக்கு 734 டன் டி.ஏ.பி., 150 டன் பொட்டாஸ், 160 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 66 டன் டி.ஏ.பி. உரங்களும் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டன.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உரக்கடைகளுக்கு 154 டன் டி.ஏ.பி., 39 டன் பொட்டாஸ், 32 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்