கிரானைட் கல் விழுந்து பெண் பலி

பர்கூரில் கிரானைட் கல் விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-10 18:45 GMT

பர்கூர்

போச்சம்பள்ளி தாலுகா இந்திரபுரியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சின்ன பொண்ணு (வயது 30). இவர் ஐகுந்தம் கூட்டு ரோட்டில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 17-ந் தேதி வேலை செய்தபோது கிரானைட் கல் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சின்ன பொண்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்