திருமணமான 7 மாதங்களில் பெண் தற்கொலை

திருமணமான 7 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-06 19:28 GMT

தா.பேட்டை, ஜூன். 7-

தா.பேட்டை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் சதீஷ்குமார். எலக்ட்ரீசியன். இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகள் பரிமளாவிற்கும் (31) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த பரிமளா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்