குடும்ப தகராறில் பெண் தற்கொலை

ேகாவில்பாளையத்தில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-26 18:45 GMT

கோவில்பாளையம்

சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் மருதநகரை சேர்ந்தவர் ஹென்றி (வயது 30). இவர் அதே பகுதியில் பெண்கள் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சுமேரா (26) . இவர்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுமேராவிற்கும் ஹென்றிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுமேரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுமேராவுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்