தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருப்புவனம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-19 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் அருகே கூடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கோமதி (34). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை இ்ல்லாத விரக்தியில் இருந்த கோமதி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கோமதியின் தந்தை கருப்புச்சாமி பழையனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்