பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-04 20:58 GMT

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்த மலையாளி என்பவரது மகள் சங்கவி (வயது 20). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் தந்தைக்கு துணையாக கோரைப்பாய் பின்னும் வேலை செய்து வந்தார். மேலும் அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் படுக்கை அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் சங்கவி பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் சங்கவிக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று சங்கவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்