பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளக்கால் பொதுக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 21:19 GMT

முக்கூடல்:

பள்ளக்கால் பொதுக்குடி மெய்காத்தான் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 28). திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வள்ளியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்