பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லீலா(வயது 65). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மாத்திரைகள் உட்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமாக இருந்ததால், லீலா வீட்டில் உள்ள அறையில் ஜன்னல் பகுதியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.