திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியில் வசித்து வந்தவர் அன்னபூரணி (வயது55). இவர் கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.