தூக்குப்போட்டு பெண் தற்கொலை
மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா விஷ்ணுபுரம் நாளாம்கட்டளையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (44). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இருந்த ரேவதி அவரது பெற்றோர் வசிக்கும் மயிலாடுதுறை கூறைநாடு கஸ்தூரிபாய் தெருவில் வந்து தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ரேவதி வீட்டின் மாடியில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் ரேவதியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.