பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
2 குழந்தைகளின் தாய்
பரமத்தி அருகே கீழ்சாத்தம்பூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது.
2 பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகப்பிரியா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலையில் 2 குழந்தைகளையும் வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
தூக்கில் தொங்கினார்
மதிய வேளையில் செந்தில்குமார் வீட்டுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. தட்டிப்பார்த்தும் நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. சந்ேதகம் அடைந்த செந்தில்குமார் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அங்கு சண்முகப்பிரியா மினிவிசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர், மனைவியை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
தற்கொலை
அங்கு சண்முகப்பிரியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சண்முகப்பிரியா தற்கொலை தொடர்பாக தகவல் அறிந்த பரமத்தி போலீசார் விரைந்து வந்தனர்.
சண்முகப்பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.