தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருமருகலில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-28 16:44 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரி போலீஸ் சரகம் திருமருகல் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சவுரிராஜன். இவருடைய மனைவி திருப்பாவை (வயது 35).இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. சவுரிராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவையின் 2 பவுன் நகையை வாங்கி அடகு வைத்துள்ளார். பின்னர் அடகு வைத்த நகையை திருப்பி கொடுக்காததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த திருப்பாவை சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருப்பாவையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்