பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-02 15:08 GMT

வேலூரை அடுத்த ஊசூர் பெரிய சேக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32), லாரி டிரைவர். இவருடைய மனைவி சாவித்திரி (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக சாவித்திரிக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக சாவித்திரி மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாவித்திரி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சாவித்திரி உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமச்சந்திரன்-சாவித்திரிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்