பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வாணியம்பாடியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-10-01 18:43 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மகி (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி கவிதா (35), தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்து கவிதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார்

சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செ்யது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்