தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Update: 2023-09-05 00:49 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த மலையடி புதூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி அபி (வயது 21). நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். சக்திவேல், அபிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்