தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2023-07-17 20:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே எஸ்.சந்திராபுரத்தை சேர்ந்தவர் சரவணக்குமார். தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவருக்கும், பவித்ரா(வயது 25) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சரவணக்குமார் வெளியே சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, பவித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் விரைந்து வந்து, பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்