காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Update: 2023-06-24 19:45 GMT

காவேரிப்பட்டணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்புலட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்