பெண் தற்கொலை

ராஜபாளையத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-24 19:42 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் சம்பந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 47). இவரது மனைவி சாந்தி (45). இவர் பணிக்கு சென்று விட்டு கால தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை ராதாகிருஷ்ணன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த சாந்தி வீட்டு மாடியில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்