குடும்ப தகராறில் பெண் தற்கொலை
ஓசூரில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்
ஓசூர் சூடசந்திரம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி விஜயா (வயது33). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.