வளவனூர்,
வளவனூர் அருகே உள்ள ஏ.கே. குச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (வயது 43). இவரது மனைவி திலகம் (33). திருணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். சஞ்சய் காந்தி பண்ருட்டி அருகே சாலை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் தினமும் வீட்டுக்கு மது குடித்துவிட்டு வந்ததால், கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த திலகம் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.