பெண் தற்கொலை

பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-09-18 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே பிரான்மலை பாப்பாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நீலாமணி. இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். ராஜேந்திரன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நீலாமணியை விட்டுச் சென்று வேறு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நீலாமணி தன் மகளை, சோலை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். சோலை மற்றும் ராஜேஸ்வரிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உடல் நலக் குறைவால் சோலை இறந்தார். இதனால் ராஜேஸ்வரி சிங்கம்புணரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் நீலாமணி அடிக்கடி நோய்வாய் பட்டு வந்து நிலையில் நேற்று வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.வி மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்