போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் மனு
கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் கோமு. இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவருக்கு சாலைப்புதூரை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அவரும், அவருடன் சேர்ந்த சிலரும் எனது மகனை வெளிநாட்டில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறினர். இதனால் பல்வேறு கட்டங்களாக பல காரணங்களை கூறி ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டனர். பின்னர் கூடுதலாக பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அந்த நபர்கள் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.