குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது

மயிலாடுதுறையில் குண்டர் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்

Update: 2022-11-26 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அன்னவாசலை அடுத்த மாந்தை பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகள் மீனா (வயது 26). இவர் மீது பெரம்பூர் போலீஸ் நிலையம் மற்றும் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்தில் 48 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் மீனா மீது சாராய வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் மீனாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் லலிதா, மீனாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கலெக்டர் உத்தரவு நகலை எடுத்து சென்று திருவாரூர் கிளைச்சிறையில் இருந்த மீனாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்