நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரன்பட்டி தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கஸ்தூரி (வயது45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் கஸ்தூரி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டு அருகே உள்ள கிணற்றி கஸ்தூரி பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.