பெண் போலீஸ் ரேவதி 5-வது நாளாக கோர்ட்டில் ஆஜர்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் பெண் போலீஸ் ரேவதி 5-வது நாளாக கோர்ட்டில் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இரட்டை ெகாலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக ரேவதி, மதுரை மாவட்ட கோர்ட்டு நீதிபதி நாகலட்சுமி முன்பு ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது வழக்கின் கைதிகளான போலீஸ்காரர்கள் சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி ரேவதியிடம் குறுக்கு விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு நாளை மறுநாள் (9-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது.