சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-15 18:39 GMT

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவதுபோல் சிறப்பு ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் ரூ.6,750 வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்து தகுதி உள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்