பெரும்பத்து தூய பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை
பெரும்பத்து தூய பேதுரு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே பெரும்பத்து தூய பேதுரு ஆலயம் புதுப்பித்து கட்டப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் 54-வது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது. காலையில் ஆயத்த ஆராதனை, மதியம் அசன விருந்து, மாலையில் பஜனை பிரசங்கம் நடைபெற்றது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், மனோஜ் பாண்டியன், வள்ளியூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.