பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும்

வெறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-10 14:04 GMT

வாணாபுரம்

வெறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. இதனை அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தற்போது பெயரளவில் மட்டும்தான் கண்காணிப்பு கேமரா உள்ளது. கண்காணிப்பு கேமரா பழுதான நிலையில் அதனை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் பகல் நேரங்களில் கூட சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்