தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

Update: 2023-04-10 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் அரசு(வயது 33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள்(50) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அருள், அவரது மகன் ஸ்டாலின் மற்றும் ராமசாமி மகன் விவேக்(26) ஆகிய இருவரும் அரசுவை அசிங்கமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அருள், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தார். தலைமறைவாக உள்ள விவேக்கை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்