தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-16 18:36 GMT

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய கவர்னர் ரவியை கண்டித்தும், இதனால் அவருக்கு இறந்தவர்களின் சாம்பலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாம்பலை தபால் அனுப்ப முயன்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்