தந்தை- மகளை தாக்கி வீடு சூறை

தந்தை- மகளை தாக்கி வீடு சூறையாடிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-23 17:40 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 28). இவருடைய எதிர்வீட்டில் வசித்து வருபவர் தினகரன் (26). சிலம்பரசன் வீட்டின் கழிவுநீர் தினகரன் வீட்டு வழியாக சென்றதால் தினகரன், அவரது அக்காள் வினோதினி, தாய் பொன்முடி, தங்கை சரோஜினி ஆகிய 4 பேரும் சிலம்பரசனிடம் தகராறு செய்தனர். மேலும் சிலம்பரசனையும், அவரது மகள் ஏகசேனாவையும்(7) திட்டி தாக்கினர். சிலம்பரசன் வீட்டின் கதவு, ஜன்னல், டி.வி. போன்றவற்றை அவர்கள் 4 பேரும் உடைத்து சூறையாடினர். இது குறித்து சிலம்பரசன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தினகரன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்