மகளின் விரலை வெட்டிய தந்தை கைது
மகளின் விரலை வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியை சேர்ந்த 40 வயது நிரம்பிய தந்தை ஒருவருக்கு 17 வயது மகள் உள்ளார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் தந்தையிடம் சென்று உங்களது மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் மகளின் மீது சந்தேகமும், ஆத்திரம் அடைந்த தந்தை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து மகளின் இடது கை கட்டை விரலை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறுமி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.