குழந்தைகளை துடைப்பத்தால் அடித்த தந்தை கைது

சிதம்பரத்தில் குழந்தைகளை துடைப்பத்தால் அடித்த தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-05 19:45 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் பெரிய வாணிய தெருவை சேர்ந்தவர் பாலகுரு (வயது 32). இவர் கம்பி பிட்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா (30). இவர்களுக்கு 1 ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உடைய பாலகுரு நேற்று மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரம்யாவை அவர் அடித்து உதைத்துள்ளார். மேலும் தனது குழந்தைகளையும் துடைப்பத்தால் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரம்யா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாலகுருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்