சத்தியமங்கலத்தில் ஓய்வுபெற்ற கண்டக்டர் விபத்தில் சாவு

சத்தியமங்கலத்தில் ஓய்வுபெற்ற கண்டக்டர் விபத்தில் சாவு

Update: 2023-05-15 20:54 GMT

சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் திருநகர் காலனியில் வசித்து வந்தவர் முருகேசன். (வயது 62). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சத்தி நகர தி.மு.க. 26-வது வார்டு செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் முருகேசன் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு முருகேசன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சத்தியமங்கலம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மீது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்