சத்தியமங்கலம் அருகே விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் சாவு

சத்தியமங்கலம் அருகே விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-07 22:12 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

அரசு பஸ் கண்டக்டர்

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகன் (வயது 40). இவர் கடந்த 15 ஆண்டுகளாக சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஆறுமுகன் வேலையை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். உதயமரத்து மேடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று ஆறுமுகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆறுமுகன் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஆறுமுகன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்