சிவகிரி
சிவகிரி அருகே உள்ள கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துவீரன் (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி மருந்து வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள மருந்து கடைக்கு சென்றார். பின்னர் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். சின்னியம்பாளையம் காலனி அருகே வந்தபோது, பின்னால் வந்துகொண்டு இருந்த பொக்லைன் எந்திரம் ரோட்டில் நின்றுகொண்டு இருந்த வேனின் மீது மோதியது. இதைத்தொடர்ந்து வேன் நடந்து சென்ற முத்துவீரன் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் முத்துவீரன் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.