அந்தியூரில் கார் மோதி பள்ளிக்கூட மாணவர் சாவு
அந்தியூரில் கார் மோதி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்
அந்தியூரில் கார் மோதி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளிக்கூட மாணவர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செள்ளியான் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவர்களுடைய மகன்கள் தருண் (வயது 12), தனுஷ் (7). இதில் தனுஷ் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். தருண் அதே பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
முத்துசாமியின் மாமியார் உடல்நலம் பாதிக்கப்பட்டு அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக முத்துசாமி குடும்பத்துடன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று சென்றார்.
கார் மோதி சாவு
பின்னர் அனைவரும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட தயாரானார்கள். இந்த நிலையில் தனுசின் மாமா கனகராஜ் என்பவர் காரில் ஏறி காரை பின்னோக்கி இயக்கினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த தருண், தனுஷ் மீது கார் எதிர்பாராதவிமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அதன் பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு காரை இடித்து தள்ளியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தருண் லேசான காயம் அடைந்தார்.
பரிதாபம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனுசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தருண் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தனுசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.