பெருந்துறை அருகே கார் மோதி பெண் சாவு

பெருந்துறை அருகே கார் மோதி பெண் இறந்தார்.

Update: 2022-10-18 21:16 GMT

பெருந்துறை

பெருந்துறை அருகே கார் மோதி பெண் இறந்தார்.

கார் மோதியது

பவானி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (46). கடந்த 3-ந் தேதி ஈஸ்வரி பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் அன்று மதியம் உறவினர் ஆறுமுகம் என்பவரின் மொபட்டில் உட்கார்ந்துகொண்டு பி.மேட்டுப்பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே மொபட் ரோட்டை கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

இறந்தார்

இந்த விபத்தில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த ஈஸ்வரிக்கு உடலில் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஈஸ்வரி நேற்று முன்தினம் இரவு இறந்து விட்டார்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஈஸ்வரிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்