கோபி அருகே விபத்து: கணவருடன் மொபட்டில் சென்ற பெண் சாவு

கோபி அருகே நடந்த விபத்தில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-14 21:10 GMT

கடத்தூர்

கோபி அருகே நடந்த விபத்தில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

விபத்து

கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 72). விவசாயி. அவருடைய மனைவி ருக்குமணி (65). இவர் மொபட்டில் நேற்று முன்தினம் கணவருடன் கோபி கொளப்பலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

காமராஜர் நகர் என்ற இடத்தில் சென்றபோது மொபட் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சங்கரனும், ருக்மணியும் தூக்கி வீசப்பட்டனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பெண் சாவு

ஆனால் செல்லும் வழியிலேயே ருக்குமணி பரிதாபமாக இறந்தார். சங்கரன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய அத்தாணியை சேர்ந்த அபிஷேக் (45) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்