குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம்

குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-07-20 18:50 GMT

கறம்பக்குடி கருத்தாயுத குழுவின் சார்பில் பல்லவராயன்பத்தை ஊராட்சியில் நீர்நிலையை ஆக்கிரமித்து நர்சரி கார்டன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நமுனான் குளம் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரியும், ஊராட்சி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பட்டியலிட வலியுறுத்தியும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ராஜரத்தினம் தலைமை தாங்கினார். இதில் கருத்தாயுத குழு அமைப்பாளர் துரை குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்