அரசு கலைக்கல்லூரியை இடமாற்றம் செய்ய கோரி உடையார்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம்

அரசு கலைக்கல்லூரியை இடமாற்றம் செய்ய கோரி உடையார்பாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-15 18:19 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த ஆண்டு அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு தற்காலிகமாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஜெயங்கொண்டதிற்கு அருகே உள்ள உடையார்பாளையம் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தில் அரசு கலைக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நடந்தது. இந்த போராட்டத்தை ராஜ்குமார் பழனியப்பன் தொடங்கி வைத்தார். இதில், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்