காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-26 17:01 GMT

சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை அமலாக்கத்துறை மூலம் விசாரணை என்ற பெயரில் மிரட்டும் மத்திய அரசு கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நிர்வாகிகள் வடிவேல், வேடியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகி நரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட தியாகிகள் சங்க தலைவர் வீரமுனிராஜ் உண்ணாவிரத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை அமலாக்கத்துறை மூலம் மிரட்டும் மத்திய அரசை கண்டித்து கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் வட்டார தலைவர்கள் ஞானசேகர், காமராஜ், ஜனகராஜ், மணி, வேலவன், வெங்கடாசலம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் காளியம்மாள், தொழிற்சங்க நிர்வாகி சென்னகேசவன், நிர்வாகிகள் கனகராஜ், சண்முகம், கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முடிவில் நிர்வாகி ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்